
பெரம்பலூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் தீவிர உறுப்பினர் சேர்க்கை- மாவட்ட பயிலரங்கம் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் உறுப்பினர் சேர்க்கையை எவ்வாறு சேர்ப்பது என்று விளக்கம் அளித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் மீனாட்சி நித்ய சுந்தர், பயிலகம் கமிட்டி உறுப்பினர்கள் ராம்குமார், சாய் சேகர், பானுமதி, ராஜா .பிரிவு மாநிலச் செயலாளர் உமா ஹைமாவதி, அமைப்புச் செயலாளர் பழனிவேல் சாமி, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பாஜக ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
