பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தக் கோரியும் திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரமணி என்ற ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆசிரியருக்கு பணி பாதுகாப்புச் சட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் ரமணி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உரிய இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும். இது போன்ற ஆசிரியர் விரோத சம்பவம் இனி எங்கும் நடைபெறாத படி கொலையாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோஜாக் மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் நடராஜன தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஈவேரா, இராமலிங்கம், காசிராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் ரவி கண்டன உரை நிகழ்த்தினார் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
ச கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள SAP CBSE ட்யூஷன் சென்டரில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்களின் கல்வியுடன் கூடுதலாக, இந்த கண்காட்சி மாணவர்களின் ஆர்வத்தை தூண்டி, அவர்களின் புதுமையான சிந்தனைகளைப் பரிசோதனைகளும், திட்டங்களாகவும் […]
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட வானகரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபுசங்கர். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் மகளிருக்கான பணி கொட்டகையில் மகளிர் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை “உங்களைத் தேடி […]
ஈஷா புத்துணர்வு கோப்பை முதல் கட்ட வாலிபால் போட்டியை இன்று பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி துவங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எட்டியாம்பட்டி கிராமத்தில் தென்னிந்தியாவின் மாபெரும் கிராமிய விளையாட்டு […]