வேலூரில் வங்கியாளர்கள் கூட்டம்…. கல்வி கடன் ,வேளாண் கடன் விரைந்து வழங்கிட ஆட்சியர் உத்தரவு..

  வேலூர்மாவட்டம்,சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் வங்கியாளர்களுக்கான ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.

 இதில் முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன், திட்ட இயக்குநர் நாகராஜன் உள்ளிட்டோரும் திரளான வங்கி மேலாளர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் மாணவர்களுக்கான கல்வி கடன் விவசாய கடன் இளைஞர்கள் சுய தொழில் துவங்க கடன் வழங்க வேண்டும்.அதில் மெத்தனம் காட்ட கூடாது என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும் எவ்வளவு கடன்கள் வழங்கப்பட்டது எவ்வளவு கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.