தீராத வயிற்று வலி: விஷம் குடித்து பெண் பலி ராயக்கோட்டை,

நவ.22-
ராயக்கோட்டை அருகே உள்ள சூளகுண்டா கோடியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ஈஸ்வரி(27). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்களான நிலையில் மோனிகா(9), சலியா(8) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஈஸ்வரிக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்ததால் சிகிச்சையளித்தும் குணமாகவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்றும் வயிற்று வலி ஏற்படவே வீட்டிலிருந்த பூ செடிக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடத்துவிட்டு மயங்கி இருந்தவரை கிருஷ்ணகிரி ஜி.எச்சில் சேர்த்துள்ளனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி இறந்தார். இது குறித்து வந்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.