உயர்திரு.முரசொலி மாறன் அவர்களது 21- வது நினைவு தினம் இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கியவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூணாக விளங்கியருமான உயர்திரு.முரசொலி மாறன் அவர்களது 21- வது நினைவு தினம் இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக மாவட்ட கழக அலுவலகத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தே.மதியழகன்., MLA, அவர்கள் தலைமையில் அண்ணாரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர,பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் அனைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள்,அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள் என அனைவரும் கலந்து மரியாதை செலுத்தினார்கள்