திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் அடுத்த அந்தனேரி அருகே குப்பையில் மர்ம நபர்கள் காலாவதியான மளிகை பொருட்களை கொட்டி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அதனை அறிந்த அப் பகுதி மக்கள் அதனை அள்ளிச் செல்ல ஆர்வம் காட்டினர் அப்போது அந்த மளிகை பொருட்கள் காலாவதியானதை அறிந்து திரும்பவும் அங்கேயே வீசி சென்றனர்.
இந்த குப்பையில் குழந்தைகள் சாப்பிடும், குர்குரே, லாலிபாப், சாக்லேட்டுகள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் சாலையோரம் வீசி சென்றுள்ளனர்.

மேலும் வீசபட்டுள்ள உணவுப் பொருட்களை சிறு குழந்தைகள் எடுத்து சாப்பிடவும் வாய்ப்பு உள்ளது எனவே இதனை உடனடியாக அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும் கொட்டிச் சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
