தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நாசரேத்தில் உள்ள மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அரசமைப்பு பேரவையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு 75 ஆவது அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நெறிமுறைகள் மற்றும் அடிப்படை கோட்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையினை பதினோராம் வகுப்பு மாணவர் வேணு ராஜ் வாசிக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்திய நாட்டினை, இறையாண்மையும், சமநலச் சமுதாயமும், சமயச் சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், தனி மனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, உடன்பிறப்புரிமை ஆகியவற்றை வளர்க்கவும் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், கணித ஆசிரியர் கிறிஸ்டோபர், அறிவியல் ஆசிரியர் ஐசக், உடற்கல்வி ஆசிரியர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர் வழிகாட்டுதலின்படி, பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
நாசரேத் மர்காஷில் மேல்நிலைப்பள்ளியில் 75வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
