ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சார்பில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா-நகர் செயலாளர் சேர்மன் ஆர்.கே.கார்மேகம் ஏற்பாட்டில் கோலாகலம்!!

தி.மு.க தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆலோசனையின்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தி.மு.க இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்‌.ஏ உத்தரவின் படி ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக செயலாளர்,நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் ஏற்பாட்டில் திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து,பழைய பேருந்து நிலையத்தில் தி.மு.க கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி,அத்துடன் சாலையோர வியாபாரிகளுக்கும்,ஆதரவற்றோருக்கும் மதிய உணவும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் ராமநாதபுரம் நகர சபை துணைத் தலைவர் தெற்கு நகர் திமுக செயலாளர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் யூனியன் தலைவர் கே.டி. பிரபாகரன்,உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஆர்.கே.கே
கார்த்திக்,20-வது வார்டு செயலாளரும்,தி.மு.க மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளருமான பொறியாளர் கா.மருதுபாண்டி,10-வது வார்டு கவுன்சிலர் காளிதாஸ்,28-வது வார்டு கவுன்சிலர் சண்.ராமநாதன்,22-வது வார்டு தி.மு.க செயலாளர் கண்ணன்,தி.மு.க நகர் செயலாளர் நிர்வாகிகள்,வார்டு செயலாளர் பிரதிநிதிகள் அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள்,BLA 2 நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.