பென்னாகரம் பேருந்து நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திமுக இளைஞரணி செயலாளர் தமிழக துணை முதல்வரும் ஆன உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல்வறு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் திமுக ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் ஏற்பாட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் தலைமையில் பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு உண்டு உறவிட பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு போர்வைகள் வழங்கப்பட்டு பின்னர் மடம் அரசு பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நகரத் செயலாளர் பேரூராட்சி தலைவருமான வீரமணி, மாவட்ட பிரதிநிதி சிவக்குமார் துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், திமுக மகளிர் அணி மணிமேகலை மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.