வெள்ளத்தில் சிக்கி பலியான டாஸ்மாக் பணியாளர் சக்திவேல் மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிககை எடுக்க வேண்டும்! அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

   விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி  வட்டத்தில் பணி புரியும் டாஸ்மாக் பணியாளர் சக்திவேல் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானார்.  பணியாளர் உயிரிழப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே   கண்டன ஆர்ப்பாட்டம் டாஸ்மாக் ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர்     எஸ்.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.  

டாஸ்மாக் சங்க தொமுசா மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு நிர்வாகி கே.குமார், விற்பனையாளர் சங்க மாநில நிர்வாகி மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் சாத்தனூர் அணை நிரம்பி திடீரென திறக்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி வட்டம் டாஸ்மாக் கடை எண் 11405 பணியாளர் சக்திவேல் மேலதிகாரி நிர்பந்த உத்தரவு காரணமாக எந்தவித பாதுகாப்புமின்றி டாஸ்மாக் கடையை படம் எடுக்க சென்ற பொழுது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த பணியாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும், தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழ்நாடு அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தினை தொமுச மாவட்ட செயலாளர் கு. சேவியர் துவக்கி வைத்தார்.

       ஏ ஐ டி யு சி மாநிலச் செயலாளர்                   ஆர். தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தினை முடித்து வைத்து உரையாற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியு சி மாவட்ட நிர்வாகிகள் வெ.சேவையா, தி.கோவிந்தராஜ், துரை.மதிவாணன், டாஸ்மாக் சங்க தொமுச பொருளாளர் கமலநாதன், ஏஐடியுசி டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் பாலவடிவேலன், மாவட்ட துணை செயலாளர் சார்லஸ், நிர்வாக குழு உறுப்பினர் எம்.கருணா உள்ளிட்டார் பங்கேற்றனர்.