திருப்பத்தூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் 2024 ஆண்டை முன்னிட்டு திருப்பத்தூர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் 34 நபர்களுக்கு 14ஆயிரம் மதிப்பில் தொலைபேசியும்

அதேபோல 36நபர்களுக்கு ஒரு லட்சத்து இராண்டாயிரம் மதிப்பில் இருசக்கர வாகனமும் மற்றும்

மேலும் 8 நபர்களுக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் மதிப்பிலான பேட்டரி பொருந்திய சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரங்கள் என மொத்தம் 78 பேருக்கு 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன், மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன், திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன். திருப்பத்தூர் நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா.மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.