திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்ன வேப்பம்பட்டு பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாமினை குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வை குறைபாடு உள்ள பள்ளி மாணவர்களுக்கு பாசத்துடன் கண் கண்ணாடியை மாட்டி விட்ட மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்ன வேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது‌.

அதனை தொடர்ந்து பல்வேறு மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.அப்போது
பார்வை குறைபாடு உள்ள பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடியை மாட்டி விட்டார்.

இந்த முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் வினோத்குமார், புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி தேவி, சின்ன மோட்டூர் புகழேந்தி மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண், காது, மூக்கு, தொண்டை, வயிறு, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீரிழிவு நோய் , சர்க்கரையை நோய், காசநோய், இருதயநோய், மகளிர் மருத்துவம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பால்வினை நோய்குழந்தைகள் நோய், எலும்பு மூட்டு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது

மேலும் இம் முகாமில் பொதுமக்களுக்கு ரத்தத்தில் இரும்புச்சத்து சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு கண்டறிதல், ரத்த அழுத்த பரிசோதனை ரத்த வகை கண்டறிதல், சிறுநீரில் உப்பு சர்க்கரை அளவு கண்டறிதல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் சித்த மருத்துவ பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டன. பால் வினை நோய் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்திய சதீஷ்குமார், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிந்துஜா ஜெகன், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு துணை தலைவர் ஸ்ரீதேவி காந்தி, ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, வட்டார வளர்ச்சி (கிராம) அலுவலர் ராஜேந்திரன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாசேகர் ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில்குமார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விநாயகமூர்த்தி கிராம நிர்வாக அலுவலர் மீரா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.