தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி .

தஞ்சாவூர்,டிச.7- தஞ்சை நாஞ்சில் கோட்டை ரோடு மறியல் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநகர தலைவர் ஆனந்த் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய தலைவர் தமிழ், கிழக்கு ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட மகளிர் அணி உஷா ,மாநகர மகளிர் அணி புனிதா ,கிழக்கு ஒன்றிய மகளிர் அணி சாந்தி, மாவட்ட நிர்வாகி ஜனபிரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.