ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சுதந்திரப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் சூட்ட வேண்டும்-பா.ம.க மாவட்ட செயலாளர் கோரிக்கை.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடும் அரிட்டாபட்டி சுற்றியுள்ள கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மதுரை வந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸிற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் தலைமையிலான பொறுப்பாளர்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து 2025-ம் ஆண்டிற்க்கான காலண்டரை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சார்பாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தி நிலத்தடி இரு மற்றும் சுற்றுச்சூழலை காக்க வேண்டும் அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து உரிய பங்கு நீர் வருடம் முழுவதும் வர வேண்டும்
மருத்துவர் அன்புமணி ராமதாஸின் 2018-ம் ஆண்டு நடத்திய வைகையை காப்போம் தொடர் போராட்டத்தின் காரணமாக 37 ஆண்டுகள் கழித்து ராமநாதபுரம் நகருக்கு வைகைநீர் வந்தது குறிப்பிடத்தக்கது.அது நிரந்தரமாக வருவதற்கு உதவி செய்ய வேண்டும்.
மேலும் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க
கச்சத்தீவை மீட்க வேண்டும் அதற்காக தலைவர் அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து நிறைவேற்று தர வேண்டும் என்று கோரிக்கை கோரிக்கை வைத்தனர்
இது சம்பந்தமாக சனவரி கடைசியில் ராமநாதபுரம் வருகை தந்து பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என்று அறிவுறுத்தினர்.

அதேபோல் ராமநாதபுரம் நகரச் செயலாளர் மருத்துவர் ஸ்டாலின் அவர்கள் ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு
சுதந்திரப் போராட்ட வீரர் ரிபல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் வைக்க வேண்டும்
அதற்காகவும் தலைவர் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலுத்தேவர்,திருவாடானை சட்டமன்ற தொகுதி செயலாளர்
திருப்பாலை முனியசாமி,மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.