ராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சி தர்ஹா திடலில் தமிழகத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்களையும், தொடரும் பெண்களுக்கு எதிரான கொடுமையை கண்டும் காணாமல் இருக்கும் தி.மு.க அரசை கண்டித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நகரத் தலைவர் பாத்திமா கனி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் பாத்திமா முன்னிலை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் பனைக்குளம் சித்தி நிஷா அனைவரையும் வரவேற்றார்.எஸ்.டி.பி.ஐ கட்சி தொகுதி தலைவர் பீர் முஹைதீன் கண்டன கோஷமிட்டார்.விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம், எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில மீனவர் அணி துணை ஒருங்கிணைப்பாளர் செய்யது இப்ராஹிம்,ஆகியோர் யார் அந்த சார் என்கிற தலைப்பில் கண்டன உரையாற்றினர். முடிவில் நகர் தலைவர் சமீரா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
