ராமநாதபுரம் நகர் பா.ஜ.க அலுவலகத்தில் தி.மு.க அரசை கண்டித்து கருப்புக்கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம்!!!

தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி குடிநீரை கோட்டை விட்டு மக்களை குடிகாரர்களாக்கும் ஆளும் தி.மு.க அரசை கண்டித்து ராமநாதபுரம் நகர் பா.ஜ.க அலுவலகத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் ஜி.குமார், பொருளாதார பிரிவு மாநில செயலாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் கருப்புக்கொடி காட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஊடக பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.பி.குமரன் உட்பட ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டு தி.மு.க அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.