
ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஸ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் மாநில திட்ட இணை இயக்குநர் வை.குமார்.மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் காலை வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பள்ளியின் நிர்வாகி டாக்டர் எஸ்.மாடசாமியிடம் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து அனைத்து விபரங்களையும் நேரில் கேட்டறிந்த பின்பு ஆய்வு மேற்கொண்ட அவர்கள் தலைமை ஆசிரியரிடம் காலை வழிபாட்டு நிகழ்வு முறையாக நடக்கிறதா என்றும்,மாணவர்கள் பராமரிப்பு,உணவு பொருட்கள்,சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு,தங்கும் வசதிகள் அனைத்தையும் நேரில் பார்த்து ஆய்வு செய்தனர்.
ஆசிரியர்களின் வருகை பதிவேட்டில் ஆய்வு செய்த பின்பு, சமையல் பணியாளர்களிடம் அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறதா? என்று கேட்டறிந்து காலை உணவையும் பொங்கல், சாம்பார்,சட்னி,சமையலரிடம் பெற்று ஆய்வு செய்தனர்.அனைத்தையும் ஆய்வு செய்த பின்பு பள்ளியின் செயல்பாடுகள் அனைத்தும் திருப்திகரமாக உள்ளது என்று பாராட்டிச் சென்றனர்.
