
போச்சம்பள்ளி அடுத்து புலியூரில் பாரதிய ஜனதா கட்சி காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் மும்மொழி கொள்ளைக்கு ஆதராக சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தலைமையில் தொடங்கப்பட்டது.
இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவர் கவியரசு, மாவட்ட முன்னாள் தலைவர் சிவப்பிரகாசம் ,மாவட்டத் துணைத் தலைவர்கள எம்.ஆர்.ராஜேந்திரன், செந்தில், ராஜேந்திரன்,வெங்கடாசலபதி முன்னிலை வகித்தனர்.
இதில் காவேரிபட்டினம் வடக்கு மண்டல தலைவர் வசந்தி மற்றும் அரசு தொடர்பு பிரிவு தலைவர் தருமன், முன்னாள் ஒன்றிய தலைவர் கேசவன், முன்னாள் மண்டல பொதுச் செயலாளர் சசிகுமார், முன்னாள் மண்டல பொதுச்செயலாளர் பசுபதி, திருமுருகன் ,முருகு, இளவேனில் உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த 100ற்கும் மேற்பட்டோர் இந்நிழக்வில் கலந்துக்கொண்டு, மும்மொழி கொள்ளைக்கு ஆதரவாக பேசினர்.
அப்போது பேசிய பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் கவியரசு, தமிழக மக்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் ,மாநில தலைவர் அண்ணாமலை யின் அறிவுறத்தலின் பேரில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஒரு மொழியையும் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம் என பேசினார்.
