அரியலூரில் அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் போராட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அரங்கநாதன் தலைமை வகித்தார் மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் மாவட்ட செயலாளர் லெனின் மாவட்ட பொருளாளர் இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்தப் போராட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் சரியான எடையில் இறக்கப்பட வேண்டும் அனைத்து ரேஷன் கடைகளிலும் எடை யாளரை நியமனம் செய்ய வேண்டும் அகில இந்திய ஆய்வு அறிக்கையின் படி ரேஷன் கடைகளுக்கு சேதாரக் கழிவு வழங்கப்பட வேண்டும் ரேஷன் அட்டைதாரர் விரல் ரேகை பதிவு ஆதார் சரி பார்ப்பை 40 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்த்தியதை ரத்து செய்து மீண்டும் 40% ஆக்க வேண்டும் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன இந்த போராட்டத்தில் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்