பர்மிட் வாங்கி வைத்துள்ளோம் என்ற பெயரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மண் கொள்ளை! கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கும் அதிகாரிகள்! ட்ரிப்சீட் இல்லாமல் ஓடும் வாகனங்கள்

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு அடுத்த ஜடையனூர் பகுதியில் உள்ள ஏரியில் கடந்த சில மாதங்களாக மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பயனாளியின் பெயர் வேலு என்ற பெயரில் ஜடையனூர் ஏரியில் ஒரு சில வாகன எண்ணுக்கு மட்டும் பர்மிட் போடப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரம் கொண்டு மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் பயனாளிகள் மண் அள்ளும் போது முறையாக அதிகாரிகள் உடனிருந்து ட்ரிப் ஷீட் (அனுமதிச்சீட்டு) அவ்வப்போது மண் அள்ளும் வாகனத்தின் எண் மற்றும் அதேபோல ஒவ்வொரு லோடு அள்ளும் பொழுதும் டைமிங் குறிப்பிட வேண்டும்

ஆனால் அதிகாரிகள் அங்கு இல்லாமல் ட்ரிப் ஷீட் போடாமலும் மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை கண்டுகொள்ளும் அதிகாரிகளோ அவர்களுக்கு தேவையான கனிசமான தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் உள்ளனர்.

மேலும் இதனை செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை மண் கொள்ளையர்கள் வீடியோ எடுக்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளது

இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு மண் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்

மேலும் அதேபோல பெயரளவுக்கு மட்டும் பர்மிட் போட்டுவிட்டு அதிக வாகனங்களைக் கொண்டு மண் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது