
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருகிற 12/7/2025 அன்று குரூப்4 தேர்வினை நடத்துகிறது. இந்த தேர்வினை 19 லட்சத்திற்கு மேற்பட்டோர் எதிர் கொள்ளவுள்ளனர். ஒரு பதவிக்கு 350 பேர் போட்டியாக உள்ளது. இந்த தேர்வுக்கு அனுப்பபடும் கண்காணிப்பாளர் முறையான பயிற்சி இல்லாமலே அனுப்ப படுகின்றனர். இதனால் வினாதாள், விடைத்தாள் வழங்குவதில் குழப்பங்கள் நீடிக்கிறது. மாரி மாரி வினாத்தாள்களை வழங்குகின்றனர். அது மட்டுமின்றி தேர்வர்கள் கையொப்பமிடும் இடத்தில் கண்காணிப்பாளர் கையொப்பம் இடுகின்றனர். பிறகு அழிப்பான்களை கொண்டு அவர்களே அழிக்கும் நிலை உள்ளது. இதனால் தேர்வர்களுக்கு மதிப்பெண்கள் குறைக்க படுகிறது.போட்டி கடினம் என்பதால்1 மதிப்பெண்,1/2 மதிப்பெண்ணில் வேலை கிடைக்காமல் போகும். எனவே முறையான ஆலோசனைகளை தேர்வு அறையின் கண் காணிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என பழனி ஆயக்குடி மரத்தடி மையம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
