
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமையான இன்று 12 மணி அளவில் நடைபெற்றது.
மேலும் இந்த முகாமில் கட்டேரி, பக்கிரிதக்கா, அம்மையப்பன் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்துபொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் அடங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர்.
அதனை பெற்று கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்த ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் அதிகாரிகளிடம் மக்களுக்கு உடனடியாக பயன்பெறும் வகையில் அனைத்து மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என கூறினார் இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ் சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் எஸ் கே சதீஷ்குமார்
அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் நானும் ஒரு வேலைய தொடங்கிட்டா முடிக்கமா விட மாட்டேன் மக்களுக்கு நன்மை கிட்டும் அதற்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் பேசினார்.
