ராமநாதபுரத்தில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்:மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் கிங்ஸ் பேலஸ் மஹாலில் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நாளை மாலை 4.15 மணிக்கு நடைபெறுவதாக அக்கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் பட்டணம்காத்தான் கிங்ஸ் பேலஸ் மஹாலில் மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் மண்டல தேர்தல் பொறுப்பாளர் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,வனத்துறை அமைச்சர் தேர்தல் பணி குழு தலைவர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்,மாவட்ட பொருளாளர் பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன்,தி.மு.க தலைமையால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச்செயலாளர் கொடி சந்திரசேகர் (பரமக்குடி),மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் அருண் (திருவாடானை),புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மருத்துவர் சுதர்சன் (ராமநாதபுரம்),விருதுநகர் தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் (முதுகுளத்தூர்) ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இக்கூட்டத்தில் ராமநாதபுரம் வருகை தரும் கழக தலைவருக்கு வரவேற்பளிப்பது குறித்தும்,கழக ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில,மாவட்ட நிர்வாகிகள்,தலைமை செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள்,நகர்,ஒன்றிய,பேரூர் செயலாளர்கள்,நிர்வாகிகள்,இந்நாள்,முன்னாள் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,அனைத்து அணிகளின் நிர்வாகிகள்,கிளை,வார்டு செயலாளர்கள்,வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள்,பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட கழக முன்னோடிகள்,கழக தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.