
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் சிறப்பு முகாம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் ஒருநாள் முழுவதும். பாபநாசம் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலதிட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி மக்களை சென்று அடைவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டார் இம் முகாமில் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து ஆயிரத்துகு மேற்ப்பட்ட மனுக்களை 3 மணிநேரம் நின்றுகொண்டு பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பிரித்து வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் முகாமில் 14 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினை வழங்கினார் முன்னதாக பாபநாசம் தாலுகாவில் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் பின்னர் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடம், பாபநாசம் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் இம் முகாமில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கும்பகோணம் சப் கலெக்டர் செல்வி ஹிருத்யா எஸ்.விஜயன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் ஒன்றிய குழு தலைவர்கள் சுமதி கண்ணதாசன், கலைசெல்வன் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் பாபநாசம் வட்டாட்சியர் செந்தில்குமார் பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருககுமார் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் பிரேம்குமார் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோவி அய்யாராசு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் முகம்மது ரிஃபாயி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தினி, குமார், ராஜன், நவரோ சா பாபநாசம். வேளாண் உதவி இயக்குனர் முகம்மது பாரூக், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை குழு கண்காணிப்பாளர் தாட்சாயினி துணை வட்டாச்சியர் பிரபு வருவாய் ஆய்வாளர் சுந்தரேசன் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர் .
