
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி,காமராஜர் நகர் பகுதியில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ரூபாய்.3.60 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக்டண்
கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்.பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர்.
உடன் இந்த நிகழ்ச்சியின் போது துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
