
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் தெருவில் 3 பெண்களை இஸ்லாமியர்கள் காதல் திருமணம் செய்து மதமாற்றம் செய்ததை கண்டித்து பஜ்ரங்தள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் பொன்விழா மைதானம் அருகே ஊர்வலமாக வந்த பஜ்ரங்தள் பிரிவை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநில பஜ்ரங்கள் துணைச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் மாநில பஜ்ரங்கள் தென்பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக் போராட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் ராஜபாளையம் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரேம், என்.ஏ. ராமச்சந்திர ராஜா, ராமசுப்பு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ராஜபாளையம் டிஎஸ்பி பிரித்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் அசோக்பாபு உள்ளிட்ட ஏறாளமான போலீசார் குவிக்கப்பட்டு 20 பேர்களை கைது செய்தனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
