சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் ஊராட்சியில் அரிமா சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றதுகள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி
அக்-07

கள்ளக்குறிச்சி மாவட்டம்
சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் ஊராட்சியில் சமுதாய கூடத்தில் பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கம் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ குழுவினர் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஊராட்சியில்
தலைவர் ஆர்.எம்.எஸ்.கே.
அர்ச்சனா காமராஜ் முகாமை துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், செயலாளர் இனாயத்துல்லா, பொருளாளர் பழனிவேல் ஆகியோர் முகாம் ஏற்பாடு செய்தார்கள்.
சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட தலைவர் வேலு முன்னாள், மாவட்ட தலைவர்கள் அண்ணாமலை, பாண்டியன், தண்டாயுதபாணி, பாலசுந்தரம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு கண்ணில் புரை, சதை வளர்ச்சி, நீர் அழுத்தம்,நீர் வடிதல், கண் எரிச்சல், கண்வலி, தலைவலி, துரப்பார்வை, கிட்ட பார்வை, குறித்து மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்புரை நீக்கி இலவசமாக கண்ணில் லென்ஸ் பொருத்தப்படும்.
இந்த நிகழ்வில்
துணைத் தலைவர் விருத்தாம்பாள், பச்சையாப்பிள்ளை, ஊராட்சி செயலர் திருமாவளவன், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரிமா சங்கத்தின் சார்பில் குடிநீர் பிஸ்கட் வழங்கினார்கள்.