கரூர் படுகொலைக்கு காரணமான தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜயை கைது செய்யக்கோரிபென்னாகரத்தில் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் 42பேர் இறந்த வழக்கில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்டோரை கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் பென்னாகரத்தில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது . பென்னாகரம் B.D.0 அலுவலகம் ,இந்திரா நகர் 4 ரோடு, போடூர் 4ரோடு உள்ளிட்ட இடங்களில் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வட்டார துணை செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார் . மாவட்ட செயலாளர் சிவா மாநில பொருளாளர் அருண் மாநில இணை செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர் . இதில் கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 42 பேர் உயிரிழந்தனர் . இந்த வழக்கில் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் .