வாணியம்பாடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரிப் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் நிர்வாகிகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரிப் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் சதாம் சாஹிப் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சீருடை வழங்கப்பட்டதுடன், ஏழை மற்றும் எளிய பின்னணியிலுள்ள இரண்டு பெண்களுக்கு தையல் மெஷின்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வாணியம்பாடி காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.