திருவாரூர் மாவட்டம் வலங்கைமானுக்கு முன்னாள் அமைச்சரும்,நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் வருகை தந்தார். முதலில் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து நாளை (21-ஆம் தேதி) திங்கட்கிழமை வலங்கைமான் கடைவீதியில் உள்ள வலங்கைமான் பத்மசாலியர் சமூகத்திற்கு சொந்தமான ஸ்ரீ கோதண்ட ராமசாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அங்கு சென்று சாமி தரிசனம் செய்து, நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டார். ஆலய அறங்காவலர் குழு தலைவர் டி.சீத்தாராமன், அறங்காவலர் எஸ். லட்சுமணசாமி மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் பணி விவரங்களை தெரிந்து கொண்டார். நிகழ்ச்சியில் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும்,வலங்கைமான் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான குமாரமங்கலம் கே. சங்கர்,வலங்கைமான் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் யூ. இளவரசன்,வலங்கைமான் நகர செயலாளர் சா. குணசேகரன்,மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ஜெய. இளங்கோவன்,வலங்கைமான் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாஸ்டர் எஸ். ஜெயபால், நகர அவை தலைவர் ரத்தினகுமார், எடை மெஷின் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் மற்றும் வலங்கைமான் பத்மசாலியர் சமூகத்தினரும்,பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வலங்கைமானில் நாளை ( 21-ஆம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெறும் ஸ்ரீ கோதண்டராமசாமி ஆலயத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜர் வருகை தந்தார்.
