
திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மேடை பந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மேடை பந்து போட்டியில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர், ஊட்டி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 450 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டிக்கு சேத்தான் தலைமை தாங்கினார் இதில் புத்மல் முன்னிலை வகித்தார்
பயிற்சியாளர் ஆதித்யன் அனைவரும் வரவேற்றார்
இந்த மேடை பந்து போட்டியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு, நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு, ஆறு முதல் எட்டாம் வகுப்பு, ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு, ஓப்பன் சிங்கல், ஓப்பன் டபுள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த மேடை பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசாக 1000 ரூபாய், கோப்பை மற்றும் மெடல் வழங்கப்பட்டது. இரண்டு மற்றும் மூன்றாம் பரிசாக தலா 500 ரூபாய், கோப்பை மற்றும் மெடல் வழங்கப்பட்டது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை விஜய் டேபிள் டென்னிஸ் செயலாளர் சுரேஷ்பாபு செய்திருந்தார்.
