
கோவை விழா 18 வது பதிப்பு நவம்பர் 14 ஆம் தேதி முதல் அனைவருக்குமான நிகழ்வுகளுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் விழாவின் 10 வது பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் ஓவிய சந்தை இந்த ஆண்டும் நடத்தப்பட்டது. ரிப்ளெக்ஷன்ஸ் கருப்பொருளை மையமாக கொண்டு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.
கோயம்புத்தூர் மற்றும் தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கலைஞர்கள் பல்வேறு கலை வடிவங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்தும் களமாக அமைகின்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டு நிகழ்ச்சியானது , ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டது.
இந்த ஆண்டின் கோயம்புத்தூர் விழா ஆர்ட் ஸ்ட்ரீட் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்தது. நகரின் மிகவும் விரும்பப்படும் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 90 கலைஞர்கள் பங்கேற்று, தங்களது தனித்துவமான கலைத்திறன்களை வெளிப்படுத்தினர். இது கோவையின் வளர்ந்து வரும் கலைத்துறைக்கு ஒரு வண்ணமயமான கொண்டாட்டமாக அமைந்தது.
இந்த ஆண்டின் முக்கிய புதுமையாக பெவிலியன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன
.

பார்வையாளர்களிடையே இவை பெரும் வரவேற்பைப் பெற்றன; இது முழு ஆர்ட் ஸ்ட்ரீட் அனுபவத்துக்கு ஒரு புதிய ஆழத்தையும் அழகையும் சேர்த்தது. இந்த ஆண்டு கருப்பொருள் “ரிப்ளெக்ஷன்ஸ் , ஒளி மற்றும் வடிவங்களின் உடல் பிரதிபலிப்புகள் முதல் மனது, உணர்ச்சி, நினைவுகள் ஆகியவற்றின் ஆழமான பிரதிபலிப்பதாக இருந்தது. கோவையின் கடந்த காலத்தையும் அதன் மாற்றம் அடையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் வகையில் இந்த கருத்து பார்வையாளர்களை ஆழ்ந்து சிந்திக்கவும், யோசிக்கவும், கோயம்புத்தூரை புதிய கோணங்களில் மீண்டும் கண்டறியவும் செய்தது.
