திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.10.2024 மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல் புதிய குடும்ப அட்டை ஆக்கிரமிப்பு அகற்றுதல் கல்விக்கடன் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 186 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூளைமுடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு அமர்வு நாற்காலியினையும், 17 நபர்களுக்கு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கைகால்கள் மற்றும் செயற்கை கைகளையும், மாவட்ட சமூகநலன் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.34 ஆயிரத்து 944 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு உலமாக்கள் நலவாhரியம் மற்றும் கிறித்துவ நலவாரிய அடையாள அட்டையினையும், மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் கார்த்திகா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

