திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றத்தை கண்டித்து, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கன்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர்..

தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் என்பது, தாங்கள் பட்டியல் சாதியான எஸ்இ, பிரிவில் இருந்து நீக்கப்பட்டு, தங்களின் உண்மையான அடையாளமான தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் தனிப் பிரிவாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர். ஆனால் இவர்களின் கோரிக்கைக்கு, மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது. இதனை கன்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் நல தன்னெழுச்சி இயக்கத்தை சேர்ந்த அந்தியூர் காமராஜ் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினர். இதில் தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினார்
அப்பொழுது அனைவரது மத்தியிலும் பேசியவர் கூறியதாவது..
எங்களது சமூகம் பட்டியல் பிரிவில் இருப்பதால், தங்களின் பூர்வீகப் பெருமை இழக்கப்படுகிறது எனவும், ஆதி திராவிடர், ‘ஹரிஜன்’ போன்ற பெயர்களால் அடையாளப்படுத்தப்படுவது அவமானம் என்றும் கருதுவதாக கூறினார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தேவேந்திர குல வேளாளர், மள்ளர் மீட்பு களம் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், தெரிவித்தார். மேலும் எங்களது கோரிக்கைகளாக
தேவேந்திர குல வேளாளர்களை எஸ்இ பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், எனவும், தங்களை ‘தேவேந்திர குல வேளாளர்’ என்றே அங்கீகரிக்க வேண்டும் எனவும்,
பட்டியல் பிரிவில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில், தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் இதனே மத்திய அரசு மூலம் நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
தேவேந்திர குல வேளாளர் என்பது பள்ளர், தேவேந்திர குலத்தார், குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையன், வாதிரியான் போன்ற ஏழு உட்பிரிவுகளின் குடைச்சொல்லாக உள்ளது,
சுதந்திரத்திற்குப் பின், தங்களை பட்டியல் வகுப்பில் சேர்க்கப்பட்டதாகவும், ஆனால் பல ஆண்டுகளாக இந்த நிலைப்பாட்டை எதிர்த்துப் போராடி வருகின்றதாகவும் தெரிவித்தனர்.
2010-ம் ஆண்டுமுதல் பல்வேறு மாநாடுகள், போராட்டங்கள், மனுக்கள் மூலம் கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றது., மேலும் எங்களுடன்
நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் இந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றுகின்றதாகவும் தெரிவித்தனர்.
சுருக்கமாக, தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை என்பது, இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பட்டியல் சாதிப் பிரிவில் இருந்து விடுபட்டு, வரலாற்றுப் பெருமையுடன் தனி அடையாளத்தைப் பெறுவதற்கான ஒரு சமூகப் போராட்டமாக இந்த போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
இந்த ஆர்பாட்டத்தில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவன தலைவரும், சமூக ஆர்வலருமான வழக்கறிஞர் புஸ்பாணந்தம், பேரூர் தேவேந்திர குல மடாதிபதி ராஜ தேவேந்திர சுவாமிகள், சூலூர் வடிவேலு, டாஸ்மாக் மணிமாறன், குருமிஸ் மஹா சபாவை சேர்ந்த கலை செல்வன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.