
க
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள உப்பிலியப்பன் வெங்கடாஜலபதி கோவிலில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்து அறநிலையத்துறை மற்றும் மயிலாடுதுறை இணை ஆணையர் மண்டலம் சார்பாக 6 இணையர் ஜோடிகளுக்கு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் திருமணம் செய்து வைத்து 60,000 மதிப்பிலான சீர்வரிசையை வழங்கினார்.

இதில் ஒன்றிய துணை பெருந்தலைவர் கணேசன் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் மயிலாடுதுறை இணை ஆணையர் சிவகுமார், சுவாமிமலை செயல் அலுவலர் உமாதேவி கும்பகோணம் உதவி ஆணையர் சாந்தா, செயல் அலுவலர்கள் கிருஷ்ணகுமார் ,ஹட்சன், கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் என மலர் கலந்து கொண்டனர்
