மாமதுரையர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் மாமதுரையர் அமைப்பின் நிறுவனர் ஜே.கே. முத்து, தலைவர் திருமுருகன், செயலாளர் சம்பத்குமார், பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலும், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனரும், நடிகரும்மான சேரன் அவர்கள் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடினர், இவ்விழாவில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாமதுரையர் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு 26 வகையான பொங்கல் வைத்தும், 26 வகையான கோலங்கள் ஈட்டும் சமத்துவ பொங்கலை சிறப்பாக கொண்டாடினார்கள், இந்நிகழ்வில் மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும், உறியடித்தல் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன,