மதுரையில் வருகின்ற 23ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பொதுக்கூட்டம்

மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பாரத ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியில் உள்ள அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபெரிய புள்ளான் ஆகியோர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் உட்பட அதிமுக பாஜக நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேசுகையில்,

பிரதமர் மோடி வருகை அன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்க உள்ள மாவட்டம் இன்னும் உறுதியாவில்லை

மதுரையில் மோடி கலந்து கொள்ளும் கூட்டம் நடந்தால் பாண்டிகோவில் அம்மா திடலில் நடத்த திட்டம். கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது எடப்பாடி, அமித்ஷா முடிவு செய்வார்கள்

பாமக அன்புமணியோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம்.

விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாஜகவுக்கு எந்த அவசியமும் இல்லை.

பழைய பராசக்தி படத்திற்கும் கூட சென்சார் போர்டு பல தடைகள் கொடுத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சி செய்வதையெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம்.

திமுக அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்களுக்கு நோக்கம்.

“கூட்டணி ஆட்சி” என நாங்கள் சொல்லவில்லை.

பாஜக 56 தொகுதிகள் மற்றும் 3 அமைச்சர்கள் கூட்டணியில் கேட்கிறார்கள் என்பது வதந்தி என்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேசினார்.