
என்ற தலைப்பில் சிறந்த பேச்சாளர், பட்டிமன்ற பேச்சாளர், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தன் பேச்சின் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
இந்த விழாவினை யுனிவர்சல் பள்ளியின் நிறுவனர் சிவப்பிரகாசம் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். பள்ளியின் தாளாளர் தீபா சிவப்பிரகாசம் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் ஜோலார்பேட்டை முன்னாள் நகர மன்ற தலைவர் அழகிரி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
வரவேற்புரை பள்ளியின் முதல்வர் கிரிநாத் வழங்கினார்.நன்றியுரை துணை முதல்வர் திருமலை வழங்கினார்.ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர பெற்றோர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் சிறப்பு விருந்தினர் தெளிவான விளக்கம் அளித்தார்.மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என 2000 நபர்கள் கலந்து கொண்டனர்.
