தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பென்னாகரம் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக ஜனவரி மாதம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர் இந்த சாலை பாதுகாப்பு பேரணியை பென்னாகரம் உதவி கோட்ட பொறியாளர் புருஷோத்தமன் கொடி அசைத்து துவங்கி வைத்தார். பின்னர் பேரணியானது அம்பேத்கர் சிலை முதல் வட்டார வளர்ச்சி அலுவலக சாலை, பேருந்து நிலையம் ,பென்னாகரம் காவல் நிலையம், போடூர் சாலை , ஒகேனக்கல் பிரிவு சாலை வரை சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணிவோம் சாலையில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம், சாலை விதிகளை கடைபிடிப்போம், பேருந்து படிகளில் தொங்கி பயணம் செய்யாதே, இரு சக்கர வாகனத்தில் சாகசம் காட்ட வேண்டாம் வாகனத்தில், அதிவேகமாக செல்லக்கூடாது மது அருந்தி வாகனம் ஓட்டாதே உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்று வழியில் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பேருந்து ஓட்டுனர்களுக்கும் மற்றும் கடை உரிமையாளர்களுக்கும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்வில் பென்னாகரம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சிங்காரவேலு, பென்னாகரம் போக்குவரத்து துறை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி காவலர் மூர்த்தி மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சாலை ஆய்வாளர்கள் மற்றும் உட்கோட்ட கண்காணிப்பாளர், போக்குவரத்து துறை காவலர்கள் என ஏராளமான கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.