
திருப்பூர் மாவட்டம் காந்தி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இண்டர்நேஷனல் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் கோவை புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளி மாணவனும், கோவை உக்கடம் பெஸ்ட் வே மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவன் அபூபக்கர் சித்திக் கட்டா போட்டியில் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவன் அபூபக்கர் சித்திக்கு பெஸ்ட் வே மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர் கராத்தே மாஸ்டர் சிஹான் ஜெமிஷா சான்றிதழ் மற்றும் நினைவு கோப்பை வழங்கி பாராட்டினர், இதில் கராத்தே பயிற்சியாளர். முக்தார் மற்றும் திருப்பூர் கராத்தே மாஸ்டர் ஹரி கிருஷ்ணன். ஆகியோர் கலந்து கொண்டனர்.
