அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் ஆலோசகர் லயன். நேரு நகர் நந்து (என்ற) பத்மநாபன் சாந்தி ஆகியோரின் பேத்தியும், ஷாம்கார்த்திக் – கவிதா தம்பதியரின் மகளுமான செல்வி லக்சணா,மற்றும் பத்ரிநாராயன் – சண்முகப்பிரியா ஆகிய தம்பதியரின் புதல்வி செல்வி. ஹன்சிகா ஆகியோரின் சலங்கை பூஜை விழா காளப்பட்டி சாலையில் உள்ள சித்ரா ஆடிட்டோரித்தில் நடைபெற்றது..
ஆச்சாரிய கலா நிபுணா குரு நந்தினி செல்வராஜ் மாணவிகளான இருவரின் பரத நாட்டிய அரங்கில்,சிறப்பு விருந்தினர்களாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி,
தொழிலதிபரும்,
பிரபல செய்தி வாசிப்பாளரும் ஆன ரத்னா சிவராமன், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324-சி மாவட்ட ஆளுநர் நித்தியானந்தம்,
மற்றும் சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் ரவிசங்கர்,பிரமீளா ஆகியோர் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில்
,கௌரவ விருந்தினர்களாக பி.டி.ஜி.மற்றும் சி.எஸ்.ஆர்.தென்னிந்திய மண்டல தலைவர் . ராம்குமார்,ஃபேரா கூட்டமைப்பின் தேசிய செயலாளர் லயன் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்கள் உட்பட அனைவரும் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்த இருவரையும் வாழ்த்தினர்..
நிகழ்ச்சியில் 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது..
