திருச்செந்தூர் திருமுருகன் இறைவழிபாடு மன்றம்52வது ஆண்டு தைப்பூச திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மகா அன்னதானம்

திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றத்தின் 52வது ஆண்டு தைப்பூசத் திருவிழா கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. மூன்றாம் நாளான இன்று முருக பெருமானுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து வேல் வைத்து பூஜை செய்து மகா அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கனக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றத்தின் 52வது ஆண்டு தைப்பூசத் திருவிழா 3 நாட்கள் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இதற்கு குருடம்பாளையம் ஊராட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும், திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றத்தின் தலைவரும், அருள்மிகு விருந்தீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவருமான பி.வி.மணி தலைமை வகித்தார்.

முதல் நாள் விநாயகப் பெருமானுக்கு தீபாராதனையுடன் தொடங்கி விழாவில் நூற்றுக்கும் மேலான குழந்தைகள், பெண்கள் கலந்துக்கொண்ட திருவிளக்கு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாம் நாள் விழாவில் சிவபெருமானுக்கு தீபாரதணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்னிசை பாட்டு மன்றம் நடைபெற்றது.

மூன்றாம் நாளான இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் வெகு விமர்ச்சியாக நடைபெற்றன. இதனையடுத்து முருகன் வேல் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அன்னதான கூடத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்ட வேகவைத்த சாப்பாட்டில் படிகள் அமைத்து மலர்கள் தூவி பூஜை செய்யப்பட்ட வேல் நிறுத்தி அன்னதானம் தொடங்கப்பட்டது.

மகா அன்னதானத்தை அருள்மிகு விருந்தீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவருமான பி.வி.மணி, திமுக ஒன்றியச் செயலாளர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விழாவிற்கான அனைத்து பூஜைகளையும் முன் நின்று விருந்தீஸ்வரர் கோயில் தயாநிதி குருக்கள் நடத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அறங்காவலர் குழுத் தலைவருமான பி.வி.மணி இவ்விழா சிறப்பாக நடைபெற நன்கொடைகள் வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் விரைவில் விருந்தீஸ்வரர் கோவிலில் இராஜ கோபுரம் அமைக்கும் பணிகளும், வளாகத்தினுள் கூரைகள் அமைக்கும் பணிகளும், அன்னதானக் கூடம் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டப்படும் என தெரிவித்தார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், அம்சவேனி பழனிச்சாமி, , வி.பி.சண்முகம், சூரியா வெள்ளியங்கிரி, எல்.எம்.டபுள்யூ அசோகன், தம்பி பார்த்திபன், அன்னதான கமிட்டியினர், அன்புக்குமார் மற்றும் சண்முகசுந்தரம், பி.வி.செல்வராஜ், வேல்முருகன், கதிர்வேல், வேலுச்சாமி, தனசேகர், சுந்தரம், பழனிச்சாமி, ராமசந்திரன், ஏ வி எம் வேல்முருகன் மெய்யழகன், டெக்சன் ராஜன், செளந்திரராஜன், பூபதி, வெள்ளகிணர் செல்வகுமார், ஜோதிமணி, விவீன், மோகனசுந்தரம், தணிக்கைசெல்வன், ரவிச்சந்திரன், சுரேஷ், பாபு, காளிதாஸ், பரமசிவம், பி.டி.மோகன்ராஜ், எல்.எம்.டபுள்யூ சிவகுமார், மணிகண்டன், சரவணகுமார் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.

இவ்விழாவில் குமரேசன், குருடம்பாளையம் முன்னாள் துணைத்தலைவர் வசந்தாமணி, சகா விக்னேஷ் உள்பட சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோயில் விழா போட்டோ, வீடியோ-க்களை கார்த்தி ஸ்டுடியோ, ஏ.வி.எம்.ஸ்டுடியோ-வினர் எடுத்தனர். ஒளி ஒலி அமைப்பை கோபி செல்வம் குழுவினர் அமைத்திருந்தனர்.