பாப்பாரப்பட்டி ஏரியூர் பெரும்பாலை பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை திடீர் ஆய்வு

ஆய்வின்போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு தலா 50,000 வீதம் அபராதம்.

பாப்பாரப்பட்டி, ஏரியூர் மற்றும் பெரும்பாலை பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து ஆய்வில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நான்கு கடைகள் இயங்க தடை மற்றும் உடனடி அபராதம் தலா ரூபாய்.50000 வீதம் மூன்று கடைகளுக்கும் ரூபாய் 25000 ஒரு கடைக்கும் விதிப்பு.

தர்மபுரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், நடமாட்டம் , விற்பனை அறவே தடுக்க மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் உத்தரவிட்டதன் பெயரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை இணைந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக
பாப்பாரப்பட்டியில் நேற்றைய முன் தினம் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் பாப்பாரப்பட்டி காவல் துறையினர் உள்ளிட்ட குழுவினர் இணைந்து மளிகை கடைகள், பெட்டி கடைகள்,பீடா கடைகள், பேக்கரிகளில் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். ஆய்வில் தர்மபுரி ரோடு மின்வாரிய அலுவலகம் எதிரில் அடுத்தடுத்த இரண்டு பீடா கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்தனர்.
பாப்பாரப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரி வழக்கு பதிவு செய்தார் என்னைத் தொடர்ந்து மேற் நடவடிக்கைக்கு உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார், உத்தரவின் பேரில் மேற்படி கடைகள் 30 தினங்கள் இயங்க தடை விதித்ததுடன், உடனடி அபராதம் தலா ரூபாய்.50000 வீதம் விதிக்கப்பட்டு கடை அடைக்கப்பட்டது. இதேபோல் நேற்றைய தினம் ஏரியூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஏரியூரில் நாகமரை மெயின் ரோட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ராஜாராம், ரமேஷ் உள்ளிட குழுவினர் இணைந்த ஆய்வில் ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த கடையை 30 தினங்கள் கடை இயங்க தடை விதிக்கப்பட்டு பராதம் ரூபாய் 50 ஆயிரம் விதிக்கப்பட்டது. மேற்படி மூன்று கடைகளுமே ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து பிடிபட்டு அபராதம் செலுத்திய கடை உரிமையாளர்கள் என்பதால் இரண்டாம் முறை பிடிபட்டதால் மேற்படி அபராதம் விதிக்கப்பட்டது என உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் பெரும்பாலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேச்சேரி சாலையில் ஒரு சிறிய பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் கண்டெடுத்து பறிமுதல் செய்தனர். காவல் நிலைய உதவி ஆய்வாளர் சின்னமாதன் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து மேற் நடவடிக்கைக்கு உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை பெயரில் மாவட்ட நியமன அலுவலர் சம்பந்தப்பட்ட பெட்டிக்கடை 14 நாட்கள் இயங்க தடை விரிக்கப்பட்டு ரூபாய்.25000 உடனடி அபராதம் செலுத்த உத்தரவிட்டார். அதனை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் பெரும்பாலை காவல் நிலைய தலைமை காவலர் பாலமுருகன் இணைந்து மேற்படி சம்பந்தப்பட்ட கடையை அடைத்து அபராத சலானை வழங்கி 14 தினங்கள் கடை இயங்கக் கூடாது என எச்சரித்து கடையை அடைத்தனர்.