
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் –
பென்னாகரம் செல்லக்கூடிய சுமார் 7.20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக ரூ.43.50 கோடியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
பென்னாகரம் அடுத்த ஒனேக்கல் சுற்றுலா தலத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். பெரும்பாலான சுற்றுலா பணிகள் கார், வேன், டூவீலர்களில் ஒகேனக்கல்லுக்கு வருவதால் சீசன் நேரங்களில் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. விபத்துகளை தடுக்க, ஓகேனக்கல் பென்னாகரம் சாலையை விரிவாக்கம் செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பின்னர் பென்னாகரம் இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிப்பை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து, முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.43.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பென்னாகரம் ஒகேனக்கல் சாலை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். நேற்று சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்வதற்கான பூமி பூஜை விழா பென்னாகரம் உதவி கோட்ட பொறியாளர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் சிங்காரவேலு, சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.
