
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், புரட்சித்தலைவி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மேலும் மாடப்பள்ளி, மடவாளம், அம்பேத்கர்புரம், அகரம், செலந்தம்பள்ளி, கொடும்பம்பள்ளி உள்ளிட்ட மேலும் பதினைந்து ஊராட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், ஜெயலலிதா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மா அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்தனர்நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய செயலாளர், “மீண்டும் அம்மா ஆட்சி மலர வேண்டும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக உருவாக்க உறுதிமொழி ஏற்போம்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வு திருப்பத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பாக செலந்தம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி சரவணன் மாடப்பள்ளி ஊராட்சி செயலாளர் ராணி நடராஜன் ஒன்றிய இணை செயலாளர் நாகராஜன் துணைச் செயலாளர் திருப்பதி அகரம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
