
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் நஜிமுநிஷா. 55 வயதான இவர் இன்று தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் தலைமையில் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர் புஸ்பாணந்தம் கூறியதாவது..
கோவை உக்கடத்தை சேர்ந்த நஜிமுநிஷா மற்றும் அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் பலரிடம், சீயான் சிட் பண்ட் என்ற தனியார் நிதி நிறுவனத்த்தை சேர்ந்தவர்கள் அதிக லாபம் ஆசை வார்த்தை கூறி, லட்ச கணக்கில் பணத்தை பெற்றுள்ளனர். தினசரி, மற்றும் வாராந்திர சீட்டு முறையில் வசூலிக்க பட்ட பணத்தை இந்த நிதி நிறுவனம் திரும்ப தராமல் ஏமாற்றி வருகின்றது. சீட்டு முடிந்தும், பணத்தை திரும்ப தராமல் உள்ளது. பணத்தை திரும்ப கேட்டால் உரிய பதில் தராமல் இழுத்தடித்து வருகின்றதாகவும், இது சம்பந்தமாக அலுவலகத்திற்க்கு சென்றால் அலுவலகம் பூட்டிய நிலையிலேயே உள்ளது. எனவே மாநகர காவல் ஆணையர் கண்ணன், இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக பாதிக்கபட்ட பெண்களின் பணத்தை திருப்ப பெற்று தர வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக தெரிவித்தார் . மேலும் இந்த நிதி நிறுவனம் தற்போது வரை தினசரி வசூலில் ஈடுபட்டு வருகின்றதாகவும், மேலும் பெண்கள் பாதிக்கப்பட கூடாது உடனடியாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் குமாஸ்தா திவ்யா, பிரபாகரன், ராதாகிருஷ்ணன் நஜிபுநிஷா, முகமது, ருபீனா, சம்சீரா, அபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிறுத்தை பாலு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
