
கோவை மாவட்டம் சிறுவாணி சாலை காளம்பாளையம் பகுதியில், ஜி.எஸ் டியூசன் சென்டரின் புதிய கிளை துவங்கபட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் மைதிலி, கலந்து கொண்டு இந்த புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், ஜிஎஸ் டியூசன் சென்டர் நிறுவனத்தின் நிறுவனர் கணேஷ் முருகன், அவர்களது தாய் சாந்தி கங்காதரன், மற்றும் மூத்த ஆசிரியர் சுமன்ஜு ஆகியோர் இணைந்து சிறப்பு விருந்தினரை வரவேற்று மரியாதை செய்தனர். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய தமிழ்த்துறை பேராசிரியர் மைதிலி கூறியதாவது.. மாணவர்கள் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதையும், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் ஒழுக்கத்தின் அவசியம் பற்றியும் மாணவர்களுக்கு பயனுள்ள அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார். ஜி. எஸ். டியூசன் சென்டர் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள், என பலரும் கலந்து கொண்டு, தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். ஜி.எஸ். டியூசன் சென்டர் நிறுவனர் கனேஷ் முருகன் தனது உரையில் கூறியதாவது..
ஜிஎஸ் டியூசன் சென்டர் கடந்த, 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது ஐந்தாவது ஆண்டாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது, தற்போது 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு கிளைகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
2026–2027 கல்வியாண்டிற்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன், மற்றும் ஸ்டேட் போர்ட் பாடத்திட்டங்களுக்கும், சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. காலை, மாலை மற்றும் வார இறுதி சிறப்பு வகுப்புகளும், வாராந்திர மற்றும் மாதாந்திர மதிப்பீடுகளும் இம்மையத்தில் நடைபெறுகின்றது என தெரிவித்தார்.தொடர்ச்சியாக மாணவர்களின் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்று விழா நிறைவு பெற்றது..
