ப்ரீதி மருத்துவமனை மங்கையர் நலன் மெகா திருவிழா பெண்களுக்கான இலவசபரிசோதனை முகாம்:1200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்

மக்களின் நலன் காப்பதையும் மக்களின் உயிர் காப்பதையும் மதுரை ப்ரீதி மருத்துவமனை தாரக மந்திரமாக எடுத்து சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

மக்களை நோயின் தீவிரத்தில் இருந்து சிகிச்சை செய்து காப்பதிலும் முன்கூட்டியே வராமல் தடுப்பதற்கு விழிப்புணர்வு கொடுப்பதிலும் மருத்துவமனையின் தலைமை மகப்பேறு மற்றும் குழந்தை பேறின்மை மருத்துவர் டாக்டர் . ஹேமா சிவக்குமார் அவர்களின் தலைமையில் பங்காற்றி வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் இந்த மார்ச் மாதம் முழுவதையும் மங்கையர் நல மெகா திருவிழாவாக கொண்டாடி வருகிறது.

குடும்பத்தின் ஆரோக்கியமான பெண் தான் ஒரு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும் என்ற இலக்கினை வைத்து இந்த மார்ச் மாதம் முழுவதும் நமது ப்ரீதி மருத்துவமனை 20 முதல் 60 வயது வரை பெண்களுக்கு முற்றிலும் ஒரு இலவச பரிசோதனை மெகா திருவிழாவை 12 நாட்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அந்த இலவச பரிசோதனைகளில் 1200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்கள் உடல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதில் சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டு அதன் வழிகாட்டுதலையும் அறிந்து பயன் பெற்றனர்.

இந்த இலவச பரிசோதனை முகாமில் 10க்கும் மேற்பட்ட அனுபவமிக்க மகப்பேறு மருத்துவர் மற்றும் பல், எலும்பு முறிவு
மற்றும் கதிரியக்க மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையோடு தொடங்கி. ரத்தப் பரிசோதனைகள், பெண்களுக்கு மிகவும் தேவையான மார்பக புற்று நோய்க்கான மேமோகிராம் பரிசோதனை, புற்று நோய் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள், பெண்களுக்கான இருதய சம்பந்தபட்ட பரிசோதனைகள், அதற்கான ஸ்கேன் மற்றும் உடல் எடை
குறைப்பதற்கான அனுபவம்மிக்க Physiotherapist மற்றும் Dietician ஆலோசனைகள் இந்த மாதத்தின் வெள்ளி சனி, ஞாயிறு, என மூன்று கிழமைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நமது மருத்துவமனையில் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் முன் பதிவு செய்து, கலந்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனை மூலம் பயன்பெற்றனர். இந்த முகாமிற்க்கான அனைத்து செலவுகளையும் ப்ரீதி மருத்துவமனை ஏற்று கொண்டது.

இந்த மங்கையர் நல மருத்துவ திருவிழாவில் மிக முக்கியமாக நோய் தடுப்பு ஆலோசனை குறிப்பாக மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சுய பரிசோதனை முறைகள், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு, தடுப்பு ஊசிக்கான ஆலோசனைகள், கருமுட்டை புற்றுநோய் தடுப்பு ஆலோசனை, மற்றும் மாதவிடாய் நிறுத்த காலத்தில் ஏற்பட கூடிய உடல்நல தொந்தரவுகள் குறிப்பாக எலும்பு அடர்த்தி குறைவு மற்றும் அதை தடுக்க கூடிய வழிமுறைகளும் தனிப்பட்ட ஆலோசனைகளும் மிக விரிவாக நிபுணர்களால் எடுத்துரைக்க பட்டது

இன்னும் வரும் முக்கிய நாட்களில், மருத்துவ துறையின் தன்னலமற்ற இந்த சேவை, இது போன்ற பல்வேறு பரிசோதனைகளுடனும், விழிப்புணர்வு முகாம்களுடனும் நடைபெற உள்ளது.

வரும் காலங்களில் “எங்கள் இலக்கு ஆரோக்கியமான பெண் ஆரோக்கியமான தலைமுறை” என்ற ஒரு இலக்கை வைத்து ப்ரீதி மருத்துவமனை பொதுமக்கள் நலனில் மிக அக்கறையுடன் தொடர்ந்து செயல்பட இருக்கிறது.