
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் ரகு பாலாஜி அவர்கள் நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார், சந்திப்பில், மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக என்னை அறிவித்ததற்கு கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார், தற்போதுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை, ஆகையால் தொகுதி மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள், ஆகையால் இந்த தடவை மேற்கு தொகுதியில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும், இவ்வாறு கூறினார், அதனைத் தொடர்ந்து மேற்கு தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தன் ஆதரவாளர்களை சந்தித்து அவர்களிடம் வாழ்த்துக்கள் பெற்றார், பின்னர் தன் ஆதரவாளர்களுடனும், திமுக கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்களுடனும் தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்,
