
வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அவ்வாறு நடைபெற உள்ள, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களுக்கு 100 சதவிகிதம், வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள, தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில், 100 சதவிகிதம் வாக்கு பதிவு செய்வது குறித்து துணிப்பையை வழங்கினர். மேலும் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தல் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது. இதனை தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, தேர்தல் விழிப்புணர்வை துவங்கி வைத்தனர். தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இக்கிளையில், சட்ட மன்ற தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
